Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவித்தது இந்திய அரசு..!

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2017-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


உலக அளவில் விளையாட்டுப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு இந்திய அரசால் விருது வழங்கப்படுவது வழக்கம். சர்வதேச அளவில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது, தயான் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்திய அளவில் சிறந்தப் பயிற்சியாளர்களுக்குத் துரோணாச்சார்யா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகிறது.

2017-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய இளைஞர்கள் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருது தடகள வீரர்கள் குஷ்பீர் கவுர், ஆரோக்யா ராஜிவ் உள்ளிட்ட 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தயான் சந்த் விருது மூன்று பேருக்கும், ராஜிவ் கேல் ரத்னா விருது இரண்டு பேருக்கும், துரோணாச்சார்யா விருது ஏழு பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அர்ஜூனா விருது பெறுபவர்கள் : 

1. மாரியப்பன் (பாரா லிம்பிக் வீரர்)
2. வி.ஜே.சுரேக்கா (வில்வித்தை வீராங்கனை)
3. குஷ்பீர் கவுர் (தடகள வீராங்கனை)
4. ஆரோக்யா ராஜிவ் (தடகள வீரர்)
5. பிரசாந்தி சிங் ( கூடைப் பந்து வீராங்கனை)
6. லஷ்ராம் திபேந்ரோ சிங் (குத்துச் சண்டை வீரர்)
7. சீட்டேஷ்வர் புஜாரா ( கிரிக்கெட் வீரர்)
8. ஹர்மன்ப்ரித் கவுர் (கிரிக்கெட் வீராங்கனை)
9. ஒய்னாம்பீம்பீம் தேவி (கால்பந்து வீராங்கனை)
10. சௌராஷ்யா (கோல்ப் வீரர்)
11. ஜஸ்வீர் சிங் (கபடி வீரர்)
12. சுனில் (ஹாக்கி வீரர்)
13. பிரகாஷ் (துப்பாக்கி சுடும் வீரர்)
14. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
15 சத்யவர்த்காடியன் (மல்யுத்த வீரர்)
16. வருண் சிங் பாடி ( பாரா லிம்பிக் வீரர்)

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது: 

1.தேவந்திரா (பாரா லிம்பிக் வீரர்)
2. சர்தார் சிங் (ஹாக்கி)

துரோணாச்சார்யா விருது: 

1. காந்தி (லேட்) (தடகளப் போட்டி)
2. ஹீரா நந்த் கட்டார்யா (கபடி)
3. பிரசாத் (பாட்மின்டன்)
4. பிரிஜ் புஷன் மோகன்டி (குத்துச்சண்டை)
5. ரஃப்பில் (ஹாக்கி)
6. சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சூடு)
7. ரோஷன் லால் (மல்யுத்தம் )
       
தயன் சந்த் விருது : 

1. பூபேந்தர் சிங் (தடகள வீரர்)
2. செய்யது சாஹித் ஹாகிம் (கால்பந்து வீரர்)
3. சுமாரை டிடி (ஹாக்கி வீராங்கனை)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement