Published:Updated:

புவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை! - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி

விகடன் விமர்சனக்குழு
புவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை! - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி
புவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை! - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி

உலக ஹாக்கித் தொடரில் 5-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது.

புவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை! - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி

இந்திய கிரிக்கெட் அணி `உலகக் கோப்பையை’ வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ஒருபுறம் அதிகரித்துள்ள நிலையில், ஹாக்கியில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய ஹாக்கி அணி சாதித்துக்காட்டியுள்ளது. உலக ஹாக்கித்தொடர் இறுதிச் சுற்று நேற்று புவனேஷ்வரில் நடந்தது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன.  இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

புவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை! - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி

போட்டி தொடங்கிய இரண்டாம் நிமிடத்தில், பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர் வருண்குமார் முதல் கோல் அடித்து நம்பிக்கை கொடுத்தார். தொடர்ந்து  இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் 11-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தியும், 25-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பைப் பயன்படுத்தியும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா தடுமாறியது.

புவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை! - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி

இந்திய அணியை எதிர்கொள்வது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. போட்டியின் முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரிச்சர்ட் 53-வது நிமிடத்தில் கோல் அடித்து, ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 2-வது இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடத் தேர்வாகி இருக்கின்றன.

Vikatan