Published:Updated:

``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்?” - அஷ்வின் சொன்ன பதில்

ராம் பிரசாத்
``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்?” - அஷ்வின் சொன்ன பதில்
``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்?” - அஷ்வின் சொன்ன பதில்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மன்கனட் முறையில் விக்கெட்டை வீழ்த்தி விமர்சனத்துக்குள்ளானார் அஷ்வின். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் அஷ்வினுக்கும் கோலிக்கும் முட்டிக்கொண்டது. இணையம் முழுவதும் இந்த வீடியோதான் ஆக்கிரமித்துள்ளது. கோலி எப்போதும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர் தன் மீதான விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலளிப்பவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று விளையாடிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூர் அணியின் இன்னிங்ஸை கோலியும், பார்த்திவ் படேலும் தொடங்கினர். தொடக்கமே அதிரடி காட்டிய இந்த ஜோடியை ஷமி பிரித்தார். ஷமியின் பந்துவீச்சில் கோலி 13 ரன்களில் வெளியேறினார். கோலியின் விக்கெட்டை அஷ்வின் ஆக்ரோஷமாக கொண்டாடினார். டிவில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூர் அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 

இதன்பின்னர் ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பு 185 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி வெற்றிக்கு இறுதி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு அனுப்பினார் அஷ்வின். இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு தூக்க ஆசைப்பட்டு கோலியிடம் கேட்ச் ஆனார். பந்தைப் பிடித்த கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். அவுட்டான விரக்தியில் சென்றவர் எல்லைக்கோட்டைத் தாண்டும்போது தனது க்ளவுஸை ஆக்ரோஷமாக கழற்றி வீசினார்.

இந்தப் போட்டிக்குப் பின்னர் பேசிய அஷ்வின், ‘இக்கட்டான சூழலில் விளையாடியபோதெல்லாம் நாங்கள் வென்றுள்ளோம். நாங்கள் ஆட்டத்தை இழந்தபோது உண்மையில் அது மிகவும் கடினமானதாக இருந்து இருக்கும். நான் ஆர்வத்துடன் விளையாடி வந்தேன். அதனால்தான் அப்படிச் செய்தேன். கோலியும் அவ்வாறேதான் விளையாட வந்தார். அவ்ளோதான்’ என்றார்.