Published:Updated:

`மொக்க ப்ளேயர்... டக்கு பௌலர்... மொக்க ஓவர்’ - இது `சி.எஸ்.கே’ வின் ராப் சாங்

ராம் பிரசாத்
`மொக்க ப்ளேயர்... டக்கு பௌலர்... மொக்க ஓவர்’ - இது `சி.எஸ்.கே’ வின் ராப் சாங்
`மொக்க ப்ளேயர்... டக்கு பௌலர்... மொக்க ஓவர்’ - இது `சி.எஸ்.கே’ வின் ராப் சாங்
`மொக்க ப்ளேயர்... டக்கு பௌலர்... மொக்க ஓவர்’ - இது `சி.எஸ்.கே’ வின் ராப் சாங்

ஐபிஎல் வந்தாலே போதும் சி.எஸ்.கே ப்ளேயர்களைக் கையில் பிடிக்க முடியாது. 2 வருட தடைக்குப் பின்னர், வந்த சி.எஸ்.கே டீம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. என்னப்பா உங்க டீம்ல எல்லாம் 30 ப்ளஸ் ப்ளேயராக இருக்காங்கன்னு சொன்னவங்களுக்கெல்லாம் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி மாஸ் காட்டியது தோனி தலைமையிலான சி.எஸ்.கே. இந்த சீஸன்லயும் ப்ளே ஆப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த சீஸனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் போட்டிக்குப் பின்னரும் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர் ட்விட்டர் பக்கங்களில் விழும் ட்வீட் எல்லாம் வேற லெவல் ரகம். ரஜினி, கமல் என எல்லா தமிழ் ஹீரோக்களின் பிரபலமான பன்ச் வசனங்களைத் தங்களின் வசதிக்கேற்ப மாற்றி ட்வீட் செய்து மிரட்டி வருகிறார்கள் இவர்கள் இருவரும். 

சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோவின் சாம்பியன் ஆல்பம் பார்த்திருப்பீங்க. ரெய்னாகூட பாடி பார்த்திருப்பீங்க. ஆனால், சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடி பார்த்திருக்கீங்களா. அதுவும் ராப் பாடலை பாடியது உங்களுக்குத் தெரியுமா. சி.எஸ்.கே வீரர்கள் சில வார்த்தைகள் தமிழில் பேசினாலே ரசிகர்கள் சமூகவலைதளத்தில் டிரெண்டாக்கிவிடுகிறார்கள். “பந்து எடுத்து சுழற்றவும் தெரியும். தேவப்பட்டா கம்பு எடுத்து சுத்தவும் தெரியும்” என ஹர்பஜன் ஒரு சிலம்பாட்டம் போட்டார். சென்னை ரசிகர்கள் மத்தியில் இதற்கு செம்ம ரெஸ்பான்ஸ்.  

இந்த நிலையில்தான் சென்னை வீரர்கள் தமிழில் பாடிய ஒரு ஆல்பத்தை சென்னை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்... டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்... என தொடங்கும் இந்த ராப் பாடலை டுப்ளிஸிஸ், வாட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை வீரர்கள் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
 

Vikatan