Published:Updated:

``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்!” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்

பிரேம் குமார் எஸ்.கே.
``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்!” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்
``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்!” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால், தோனியின் முக்கியத்துவம்குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 

``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்!” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகிவிட்டது. இன்னும் 9 நாள்களில், இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது உலகக் கோப்பை தொடர். இந்த முறை இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்த இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர், அதற்கு ஒரு சான்று. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போதைய இங்கிலாந்து ஆடுகளங்களில் விக்கெட் எடுப்பது சிரமம். ஆனால், இந்தியாவில் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் இருப்பது ப்ளஸ் என்றார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை பும்ரா, புவனேஷ்வர் கவனித்துக்கொள்வர். கூடுதலாக ஷமி மற்றும் பாண்ட்யா உள்ளனர். சுழற்பந்துவீச்சை குல்தீப் யாதவ் மற்றும் சஹால் கவனித்துக் கொள்ள உள்ளனர். 

``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்!” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் ஊடகமான கிரிக்பஸ்( Crickbuzz) ஊடகத்துக்கு பேட்டி அளித்த சஹால்,  ``நானும் குல்தீப் யாதவும் உலகக் கோப்பை தொடர்குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். இந்தத் தொடரில், எங்களின் பணிகளை நாங்கள் அறிந்துவைத்திருக்கிறோம். 

குல்தீப் யாதவ் எனக்கு தம்பி மாதிரி. நாம் சொதப்பும்போது அல்லது உடைந்து இருக்கும்போது, நம்மிடம் பேச ஒருவர் தேவைப்படுவார். நான் தவறு செய்யும்போது, குல்தீப் என்னிடம் வந்து பேசுவார். நாங்கள் அணியில் விளையாடாத காலத்திலும் பேசிக்கொண்டிருப்போம்” என்றார். 

``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்!” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்

மேலும், ''இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி குறித்துப் பேசுகையில், சுழற்பந்துவீச்சாளர்கள் எப்போதும் அவர் சொல்வதைப் பின்பற்ற ஆர்வத்துடன் இருப்பார்கள்'' என்றார். தொடர்ந்து,  ``என்ன நடந்தாலும் எங்களுக்கு மகி பாய் (தோனி) வேண்டும். நாங்கள் இப்போதும் அவர் சொல்வதைக் கேட்போம். அதன்படி நடப்போம். நாங்கள் தவறுசெய்யும்போது, அவர் அதில் தலையிடுவார். நான் அணிக்கு வரும்போதிலிருந்து அப்படித்தான். இப்போதும், நாங்கள் ஏதாவது புதிதாகத் திட்டமிட்டால், எங்களுக்கு அதுகுறித்து தோனியிடம் பேச வேண்டும் என்றிருக்கும்” என்றார்.

Vikatan