Published:Updated:

`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni

தினேஷ் ராமையா
`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni
`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni

``மகேந்திரசிங் தோனி எனும் ஜீனியஸ் இந்திய அணியில் இருக்கிறார்'' என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாஹீர் அப்பாஸ் புகழாரம் சூட்டியிருக்கிறார். 

`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni

Photo Credit: BCCI

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக இந்திய அணிக்குத் தலைமை தாங்குகிறார் விராட் கோலி. அதேபோல், கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளுள் இந்திய அணியை முக்கியமானதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்திய அணி, இங்கிலாந்துக்கு நாளை பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சௌதாம்டன் மைதானத்தில் வரும் ஜூன் 5-ம் தேதி நடக்கிறது. ஜூன் 16-ம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni

Photo Credit: BCCI

உலகக் கோப்பை தொடர் குறித்தும் இந்திய அணியின் வாய்ப்புகள் குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாஹீர் அப்பாஸ் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், `மகேந்திரசிங் தோனி எனும் ஜீனியஸ் இந்திய அணியில் இருக்கிறார். கிரிக்கெட்டின் பல்வேறு அம்சங்களை அவர் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதேபோல், இந்திய அணியை 2 உலகக் கோப்பை தொடர்களில் வழிநடத்திய அனுபவமும் அவரிடம் இருக்கிறது. அவரது அனுபவம் மற்றும் ஆலோசனை ஆகியவை பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் முக்கியமானது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு அவர்தான்'' என்று கூறியிருக்கிறார்.

`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni

இங்கிலாந்து ஆடுகளங்கள் குறித்துப் பேசிய அவர், ``உலகக் கோப்பை தொடரில் நிறைய ஹை-ஸ்கோரிங் போட்டிகளை நாம் பார்க்கலாம். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடரை எடுத்துக்கொள்வோம். 300-க்கும் அதிகமான ரன் குவிக்கப்பட்டு, பின்னர் அது சேஸ் செய்யப்பட்டதையும் நாம் பார்த்தோம். ஆடுகளங்களில் புற்கள் இல்லாத நிலையில், 450 ரன்கள்கூட சாத்தியமே. இங்கிலாந்தின் தன்மை பந்துவீச்சாளர்களுக்கு சிறிய அளவில் உதவும். அப்படிப்பட்ட சூழல் வலிமையான பேட்டிங் ஆர்டரைக் கொண்ட இந்தியா போன்ற அணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்றைய சூழலில் இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி'' என்றார். 

`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு! - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni

Photo Credit: BCCI

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் ஒன்றில்கூட வெல்லாதது குறித்து பேசிய அப்பாஸ், `அந்த சாதனை இந்தியாவசம் இருக்கலாம். ஆனால், அன்றைய சூழல் பாகிஸ்தான் அணி வசம் இருந்தால், உலகின் எந்த அணியை வேண்டுமானாலும் வெல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. தங்கள் மீதான அழுத்தங்களை யார் சிறப்பாகக் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. அந்தப் போட்டியில் யார் வெல்லுகிறார்கள் என்பது முக்கியமல்ல; தொடரின் ஹைலைட்டான போட்டியாக அது இருக்கும். கிரிக்கெட் ரசிகனாக, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆஷஸ் தொடரைவிட மிகப்பெரியது. அந்தப் போட்டியைக் காண ஆவலுடன் இருக்கிறேன்'' என்றார்.

Vikatan