Published:Updated:

``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

பிரேம் குமார் எஸ்.கே.
``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்
``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்துப் பேசிய சச்சின், இந்தத் தோல்வியினால் பயம் கொள்ளத் தேவை இல்லை என்றார். 

``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாள்களில் தொடங்க இருக்கிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிகளாகப் பல முன்னணி மற்றும் முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்ட அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது பயிற்சி ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக விளையாடி வந்த பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளது. 

``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

இந்த நிலையில், இந்தத் தோல்வி குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ``உலகக்கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடர்களில் ஒன்று இரண்டு போட்டிகள் நமது கை மீறிச் செல்வது தவிர்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி இங்கிலாந்து ஆடுகளங்கள் மற்றும் சூழல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அதை உலகக்கோப்பை தொடர் முழுவதும் பயன்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம். அதனால் இந்தத் தோல்வியினால் பயம் கொள்ள தேவை இல்லை. 

``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

ஒரு போட்டியில் முடிவை வைத்து அந்த அணியை நான் மதிப்பிட மாட்டேன். அதுவும் தொடர் தொடங்காத நிலையில், தற்போது அப்படிக் கணிப்பது தவறான விஷயம். பயிற்சி ஆட்டங்களில் அணிகள் தங்களிடம் இருக்கும் வீரர்களைக் கொண்டு வித்தியாசமாக காம்பினேஷன்களை முயற்சி செய்யும். உலகக்கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடர்களுக்கு அது அவசியமானதும் கூட.

``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

சில அணிகள் தங்களின் முக்கிய வீரர்களைக் பயிற்சி ஆட்டங்களில் களமிறக்க மாட்டார்கள். தங்களின் ப்ளேயில் 11 வீரர்கள் குறித்த விவரங்களைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மற்ற அணியினர் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். அதேநேரத்தில் வித்தியாசமான ஆடுகளங்களில் மற்ற வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் பல காம்பினேஷன்கள் பயன்படுத்தப்படும்” என்றார். 

``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது தொடர்பாக பேசிய சச்சின்,  ``நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். ஆப்கானிஸ்தான் இந்த உலகக்கோப்பை தொடரில் சில சர்ப்ரைஸ்களை வழங்கும் என்று. காரணம் அவர்களிடம் நல்ல ஸ்பின் பந்துவீச்சு இருக்கிறது. அவர்களால் மிடில் - ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்த முடிகிறது” என்றார். 

Vikatan