Published:Updated:

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

பிரேம் குமார் எஸ்.கே.
`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019
`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

உலகக் கோப்பைத் தொடரில் தோனியின் முக்கியத்துவம் குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார். 

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது கிரிக்கெட் உலகக் கோப்பை என்னும் சொல். நாளை மறுதினம்  இங்கிலாந்தில் தொடங்குகிறது பிரமாண்ட கிரிக்கெட் திருவிழா. இந்திய அணி கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டிருந்தாலும், பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும்  நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சின் முன்பு சரிந்துவிட்டது. அது, வெறும் பயிற்சி ஆட்டம்தான் என்றாலும், இந்திய அணிக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகத்தான் பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் பலமாகப் பார்க்கப்படுவது தோனி தான். அவரின் அனுபவம் கோலிக்கு மிக முக்கியம் என்பதை அனைவரும் தெரிவித்துள்ளனர். இதைத்தான் கோலியும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் குடும்பத்தினருடன் சுற்றுலாவில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

அதில், தோனியின் முக்கியத்துவம் குறித்தும் கோலிக்கு இது முக்கியமான தொடர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ரெய்னா, ``ஒருமுறை கேப்டன் என்றால் எப்போதும் அவர் கேப்டன்தான். தோனி விஷயத்தில் நான் அதைத்தான் சொல்லுவேன். 
இவர், காகிதத்தில் மட்டும் கேப்டனாக இருப்பவர் அல்ல. களத்தில் விராட் கோலிக்கே அவர் கேப்டனாகச் செயல்படுவார். அவரின் பணி என்பது கிட்டத்தட்ட அதேதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டம்ப்புக்கு பின்னால் இருந்து, அவர் பந்துவீச்சாளர்களிடம் தேவையின் போது பேசுவார். ஃபீல்டிங்கிற்கு ஆள் நிறுத்துவதையும் கவனித்துக்கொள்வார். 

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

தோனி, கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். அவர் ஸ்டம்ப்புக்கு பின்னால் நின்றால், கோலியும் நம்பிக்கையுடன் உணர்வார். கோலியும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். கோலி ஒரு நம்பிக்கையான வீரர், கேப்டன். அவருக்கு தனிப்பட்ட முறையில் இந்த உலகக் கோப்பை மிகப்பெரிய தொடராக இருக்கும். அவரின் பங்கு என்ன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர், வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். மற்றபடி எல்லாமே பாசிட்டிவ் ஆகத்தான் இருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு இதுவே சிறந்த அணி” என்றார். 

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

வரும் உலகக் கோப்பை தொடரில், முக்கிய வீரராக யார் இருப்பார் என்ற கேள்விக்குப் பதிலளித்த ரெய்னா,  ``ஹர்திக் பாண்ட்யா, அவரால் பேட்டிங் செய்ய முடியும். முக்கிய கட்டத்தில் 6-7 ஓவர்கள் பந்துவீச முடியும். எந்த நிலையிலும் அவரால் களமிறங்க முடியும். இந்த உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை அவர் வென்றால்கூட அதில் ஆச்சர்யப்பட எதுவும் இருக்காது. ஐபிஎல் தொடரில் இருந்த ஃபார்மை அவர் உலகக் கோப்பைத் தொடருக்கு எடுத்துச்செல்வார் என்றால், அவர் நிச்சயம் கேம் சேஞ்சராக இருப்பார். அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்ட்யாவை அவரது  ஸ்டைலில் விளையாட அனுமதிக்க வேண்டும்” என்றார்.

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

பயிற்சி ஆட்டத்தில் அடைந்த தோல்வி தொடர்பாகப் பேசிய ரெய்னா,  ``இந்திய அணி இடக்கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய அணியில் இடக்கைப் பந்துவீச்சாளர்கள் இல்லை. 2011 -ல் நம்மிடம் ஜாகீர் கான், நெஹ்ரா போன்ற வீரர்கள் இருந்தனர். தற்போது, கலீல் அகமது உதவியுடன் பயிற்சிசெய்கிறார்கள். ஆனால் இது போதாது. இன்னும் சில இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களைக்கொண்டு நாம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு மோசமானதாக இருக்கிறது. பாகிஸ்தானின் அமீர், வகாப் ரியாஸ், நியூஸிலாந்து அணியின் போல்ட், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் என இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். 

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

ஒருவகையில் நாம் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது நல்லதுதான் என்பேன். காரணம், நம்மால் சிறந்த காம்பினேஷன்களை உருவாக்க முடியும். எது நடந்தாலும், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதைத் தடுக்க முடியாது. சிறந்த முறையில் தொடரைத் தொடங்குவது முக்கியம். அதன் பின்னர் நம்மை நிறுத்த முடியாது. அனைவரும் நம்மை சிறந்த அணி என்கிறார்கள். நாம் இப்போது அந்த அழுத்தங்களை நம்பிக்கையாக மாற்ற வேண்டும்” என்றார். 

தொடர்ந்து,  ``இந்த உலகக் கோப்பையில் குல்தீப் மற்றும் ஜடேஜா சுழற்பந்து வீச்சை கவனிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவை கொல்கத்தா அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஆனால், அது உலகக் கோப்பையில் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர், போட்டியை வெல்லவைக்கும் அளவுக்கு திறமை இருக்கிறது. இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார். இதுதான் பிரச்னை. யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது கொஞ்சம் சிரமம்தான்.
 

`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை!' - ரெய்னா லாஜிக் #CWC2019

இங்கிலாந்து ஆடுகளங்களில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். மிடில் ஆர்டரில் தோனி சிறப்பாக விளையாடுவார். ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடியுள்ளார். ஆட்டத்தின் போக்கை கருத்தில்கொண்டு, அவர் 4 அல்லது 5 -வது இடத்தில் இறங்க வேண்டும்” என்றார்.