Published:Updated:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா! - லண்டனில் களைகட்டும் ஏற்பாடுகள் #WorldCup2019

கார்த்திகா ராஜேந்திரன்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா! - லண்டனில் களைகட்டும் ஏற்பாடுகள் #WorldCup2019
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா! - லண்டனில் களைகட்டும் ஏற்பாடுகள் #WorldCup2019

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிரிக்கெட்  உலகக் கோப்பை போட்டிகள், மே 30-ம் தேதி தொடங்குகிறது. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின், இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை இது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் எனத் தேர்வாகிய 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் உலகக் கோப்பைக்குத் தயாராக உள்ளன. #WorldCup2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா! - லண்டனில் களைகட்டும் ஏற்பாடுகள் #WorldCup2019

இதுவரை நடைபெற்றுள்ள 11 உலகக் கோப்பைத் தொடர்களில், ஆஸ்திரேலியா அணி 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இன்டீஸ், இந்தியா ஆகிய அணிகள் தலா 2 முறையும்,  பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள், இங்கிலாந்தில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் நடக்க உள்ளன. 

46 நாள்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகள் நேரடியாகத் தகுதிபெற்றன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதிச் சுற்றுமூலம் உலகக் கோப்பைக்கு என்ட்ரி கொடுத்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா! - லண்டனில் களைகட்டும் ஏற்பாடுகள் #WorldCup2019

இங்கிலாந்து - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் முதல் லீக் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது.  உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு, பிரமாண்டமான தொடக்க விழா லண்டனில் நடைபெற உள்ளது. இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியை 4,000 ரசிகர்கள் நேரடியாகக் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், 2019 உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளின் வீரர்களுக்கு மட்டும் தொடக்க விழாவில் கலந்துகொள்ள 'நோ' சொல்லியிருக்கிறது ஐசிசி. தொடக்க விழாவில் பங்கேற்பதனால், விளையாட்டு வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.  தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. 

மைதானம் ரெடி, கிரிக்கெட் வீரர்கள் ரெடி, அம்பயர்கள் ரெடி. இன்னும் ஒரே நாளில் களைகட்டப்போகும் கிரிக்கெட் திருவிழாவுக்கு நீங்க ரெடியா?. இந்த உலகக் கோப்பை குறித்த உங்களுடைய கருத்துகளை கமென்ட்டில் பதிவுசெய்யவும். 

Vikatan