Published:Updated:

`காஷ்மீரிகளுக்கே காஷ்மீர் சொந்தம்; இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அல்ல!' - ஷாகித் அஃப்ரிடி

ராம் பிரசாத்
`காஷ்மீரிகளுக்கே காஷ்மீர் சொந்தம்; இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அல்ல!' - ஷாகித் அஃப்ரிடி
`காஷ்மீரிகளுக்கே காஷ்மீர் சொந்தம்; இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அல்ல!' - ஷாகித் அஃப்ரிடி

'காஷ்மீர், இந்தியாவுக்கும் சொந்தமில்லை, பாகிஸ்தானுக்கும் சொந்தமில்லை. அது, காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது' என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் சுயசரிதைப் புத்தகத்திற்கு,  ‘கேம் சேஞ்ஜர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடியது, சர்ச்சைகள், காயங்கள் எனப் பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது.  காஷ்மீர் குறித்தும் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ இம்ரான் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்.  

''காஷ்மீர் குறித்து பலவருடங்களாக  விவாதம் நடந்துவருகிறது. காஷ்மீர் மீது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உரிமையில்லை. அது, காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது. இம்ரான் கான், காஷ்மீர் மக்களுக்கு நிறையச் செய்ய வேண்டும். அங்கு நிலவும் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். காஷ்மீர் மக்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்களைச் சமாதான முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும். இந்த துணைக்கண்டத்தில் காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் ,காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.