Published:Updated:

‘தோனியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ - மனம் திறந்த விஜய் சங்கர் 

ராம் பிரசாத்
‘தோனியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ - மனம் திறந்த விஜய் சங்கர் 
‘தோனியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ - மனம் திறந்த விஜய் சங்கர் 
‘தோனியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ - மனம் திறந்த விஜய் சங்கர் 

உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். தினேஷ் கார்த்திக் சீனியர் வீரர் இதற்கு முன்பாக உலகக்கோப்பைத் தொடரிலும் விளையாடியுள்ளார். விஜய் சங்கருக்கு இதுதான் முதல் உலகக் கோப்பைத் தொடர். இந்திய அணிக்காக இவர் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். அவரது சிறப்பான செயல்பாட்டால்தான் உலகக்கோப்பைத் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார். நான் ஒரு முதலுதவி பெட்டியைப் போலத்தான். தோனிக்கு காயம் ஏற்பட்டாலோ, விளையாடாமல் போனாலோதான் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என தினேஷ் கார்த்திக்கே கடந்த சில நாள்களுக்கு முன்பாகப் பேசியிருந்தார்.

விஜய் சங்கர் ஒரு ஆல் ரவுண்டர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காகச் சிறப்பான பங்களிப்பை அளித்தார். இந்திய அணியில் டாப் 4 இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற கேள்விக்கு இன்னும் விடையைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கே.எல்.ராகுல், விஜய் சங்கர் என இருவரும் இந்த ரேஸில் நீடிக்கின்றனர்.

‘தோனியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ - மனம் திறந்த விஜய் சங்கர் 


 
இதுகுறித்து பேசியுள்ள விஜய் சங்கர், “எல்லோருக்கும் தேசத்துக்காக விளையாட வேண்டும் எனக் கனவு இருக்கும் . இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளேன். இது மிகவும் சிறப்பான தருணம். உலகக்கோப்பை அனுபவம் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்களின் பட்டியலில் எனது பெயர் இருந்தது மிகவும் மகிழ்ச்சியானது. 4-வது வீரராகக் களமிறங்குவதற்கும், லோ ஆர்டரில் இறங்கி விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நான் அதற்குத் தயாராவது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.  இது முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தச் சூழ்நிலையில் எப்படி விளையாடுவது என்பதுதான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னைத் தயார் செய்து விளையாட வேண்டும்.

‘தோனியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ - மனம் திறந்த விஜய் சங்கர் 

கடந்த சில ஆண்டுகளாகக் காயங்களால் அவதியுற்றேன். நான் கிரிக்கெட்டை நிறைய மிஸ் செய்தேன். காயங்கள் எனக்கு நிறைய பாடங்களைப் போதித்தன. மகேந்திர சிங் தோனி ஒரு சீனியர் வீரர் இந்திய அணிக்காக நிறைய விஷயங்களைச் செய்துள்ளார்.  அணிக்காக அவர் நிறைய போட்டிகளில் வென்றுள்ளார். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் நிறைய விஷயங்களைச் சாதித்துள்ளார். ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு. தோனி கடினமான காலங்களில் சிறப்பாகப் பங்காற்றியுள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது எனது கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

Vikatan