Published:Updated:

`தயக்கம் போகணும்... எல்லோரிடமும் விழிப்புணர்வு வரணும்!' - வெண்புள்ளி பற்றிய விழிப்புணர்வு பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி
வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி

உலகம் முழுக்க இரண்டு சதவிகிதம் பேர் வெண்புள்ளி பாதிப்புடன் இருப்பதாகவும் இந்தியாவில் இதன் எண்ணிக்கை நான்கு சதவிகிதம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வகையில் EVERY OTHER SKIN COLOUR IS RESPECTED என்ற நிகழ்வு 2022 ஜூன் மாதம் முதல், 2023 ஜூன் மாதம் வரை தமிழகத்தில் நடக்க உள்ளது. இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர் அனிதா மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

உமாபதி
உமாபதி

இதுகுறித்து லுகோடெர்மா விழிப்புணர்வு இயக்க தேசிய செயலாளர் உமாபதி கூறுகையில், "வெண்புள்ளி என்பது நோய் இல்லை, அது இன்னொருவருக்குத் தொற்றாது. பரம்பரையாகவும் வராது. ஆனா, இதுக்கு நேர் எதிரான கருத்துகள் மக்கள்கிட்ட இருக்கு. அதனால 1996-ல இருந்து இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில பண்றோம். ஜூன் 25-ம் தேதியை உலக வெண்புள்ளிகள் தினமா கடைப்பிடிக்கிறோம். வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கு சுயம்வரம் நடத்தி திருமணம் பண்ணி வைக்கிறோம்.

இதுவரை எட்டு சுயம்வரங்கள் மூலமா 388 திருமணங்கள் நடத்தியிருக்கிறோம். அப்பா, அம்மாவுக்கு வெண்புள்ளிகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு வெண்புள்ளி இல்லாத நிலையைப் பார்க்கிறோம். வெண்புள்ளி இருக்கிறவங்களுக்கும் சமூகத்துக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துறோம். பள்ளி, கல்லூரிகளில் செமினார்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

Vikatan

2022-ல் கன்னியாகுமரி தொடங்கி தமிழகத்தில இருக்கிற எல்லா பள்ளி, கல்லூரிகளுக்கும் போய், மாணவர்களுக்கு வெண்புள்ளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்போறோம். 2022 ஜூன் மாசம் கன்னியாகுமரியில தொடங்குற பயணம், 2023 ஜூன் மாசம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் முடியுற மாதிரி திட்டமிட்டிருக்கிறோம். பெரும்பாலும் வெண்புள்ளிகள் 13 வயதில இருந்து 40 வயதுக்குள்ளதான் தொடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளியில படிக்கும் மாணவனுக்கு வெண்புள்ளி வரும்போது டீன் ஏஜ்ல இருப்பான். அந்த வயசுல வெண்புள்ளிகள் பற்றின உண்மைகள் தெரியாததுனால, தடுமாற்றத்தால மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கு. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அவங்களுக்கோ, சக மாணவர்களுக்கோ, உறவினர்களுக்கோ வெண்புள்ளி வந்தால் இயல்பாகவே இதைப் புரிஞ்சுக்க முடியும். மன உளைச்சலில் இருந்து வெளியில வர முடியும். ஒரு மணவன் 10 பேர்கிட்ட இந்தத் தகவலைக் கொண்டுபோய் சேர்க்கணும் என்பது எங்கள் நோக்கம். இதன் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடியும்.

வெண்புள்ளி விழிப்புணர்வு
வெண்புள்ளி விழிப்புணர்வு

வெண்புள்ளி இருக்கிறவங்களுக்கு என்னதான் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினாலும், மற்றவங்க விமர்சனங்கள் அவங்களைப் பாதிக்குது. இதனால் வெண்புள்ளி இருக்கிறவங்க இயல்பாகவே வெளியே போகத் தயங்கும் நிலை இருக்கு. இந்தச் சூழ்நிலையை மாற்றி வெண்புள்ளி இருக்கிறவங்களும் இயல்பாக வெளியில் செல்லும் நிலையை ஏற்படுத்தணும். உலகம் முழுக்க ரெண்டு சதவிகிதம்பேர் வெண்புள்ளி பாதிப்பில் இருக்கிறதாகவும். இந்தியாவில் இதன் எண்ணிக்கை நான்கு சதவிகிதம் இருப்பதாகவும் சொல்றாங்க. இந்த மக்களுடைய மன நலனைப் பாதுகாக்க இந்தப் பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம். முழு விழிப்புணர்வு பெற்ற மாநிலமா தமிழகத்தை மாற்றுவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு