Published:Updated:

`இலவசம்’ என்ற பெயரில் விவசாயத் திட்டங்களை நிறுத்துவது துரோகம்! பி.ஆர்.பாண்டியன்

பி.ஆர்.பாண்டியன்
News
பி.ஆர்.பாண்டியன்

``விவசாயம் தொழில் அல்ல. மக்களுக்கு உணவு கொடுப்பதற்கான சேவை. இதை இலவசம் எனக் கூறுவது பிற்போக்குத் தனமானது. `இலவசம்’ என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது என்பது மிகப்பெரிய துரோகச் செயல்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது, இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ``விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றம் செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியை மையமாகக் கொண்டு மத்தியரசு ஏற்றுமதி முனையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான பல மறைமுக சதி நடைபெறுவதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

`இலவசம்’ என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அரசு நிறுத்துவது என்பது மிகப்பெரிய துரோகச் செயல். இது தொழில் அல்ல. மக்களுக்கு உணவு கொடுப்பதற்கான சேவை. இதை இலவசம் எனக் கூறுவது பிற்போக்குத்தனமானது. கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் முல்லை பெரியாறு தவிர்த்து மற்ற நதிநீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தவும் முதல்வர் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செயல்படவே இல்லை'' என்று தெரிவித்தார்.