Published:Updated:

தேர்வெழுதிக்கொண்டிருந்த பள்ளி மாணவிமீது கழன்று விழுந்த மின்விசிறி! - ஆந்திராவில் அதிர்ச்சி

தேர்வு
News
தேர்வு ( PIxabay )

ஆந்திராவில் பள்ளி மாணவி ஒருவர் தேர்வெழுதிக்கொண்டிருந்தபோது, வகுப்பறை மின்விசிறி அவர்மீது கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்வெழுதிக்கொண்டிருந்த பள்ளி மாணவிமீது கழன்று விழுந்த மின்விசிறி! - ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திராவில் பள்ளி மாணவி ஒருவர் தேர்வெழுதிக்கொண்டிருந்தபோது, வகுப்பறை மின்விசிறி அவர்மீது கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தேர்வு
News
தேர்வு ( PIxabay )

ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி மீது மின்விசிறி கழன்று விழுந்ததில், அந்த மாணவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு
மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு
ட்விட்டர்

இந்த விபத்து குறித்து பள்ளி நிர்வாகம், ``தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே பள்ளியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். இனிமேல் ஒவ்வொரு வகுப்பறையிலும் மின்விசிறிகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்று விளக்கமளித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விமர்சனம் செய்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism