Published:Updated:

சென்னையில் தொடரும் அதி கனமழை! - 1,000 பேருந்துகளின் சேவை ரத்து

சென்னை மாநகரப் பேருந்து

அதி கனமழை காரணமாக சென்னை மாநகரில் 1,000 பஸ்களின் சேவையை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரத்து செய்திருக்கிறது.

சென்னையில் தொடரும் அதி கனமழை! - 1,000 பேருந்துகளின் சேவை ரத்து

அதி கனமழை காரணமாக சென்னை மாநகரில் 1,000 பஸ்களின் சேவையை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரத்து செய்திருக்கிறது.

Published:Updated:
சென்னை மாநகரப் பேருந்து

அதி கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை மாநகரில், தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. இதனால், சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நகரின் முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதனால், பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்து
சென்னை மாநகரப் பேருந்து

இதன் காரணமாக 1,000 பேருந்துகளின் சேவையை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரத்துசெய்துள்ளது. பணி மற்றும் பிற காரணங்களுக்காக வெளியே செல்ல விரும்புவோருக்காக 1,600 பேருந்துகளை மட்டும் இயக்குவதற்கு மாநகரப் போக்குவரத்துக்கழகம் முடிவுசெய்தது. ஆனாலும், இந்தப் பேருந்துகளிலும்கூட, சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளால் முழுமையான பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை.