Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறிவியல் மையத்தை சுகாதாரமாகப் பராமரிக்க ஆட்சியர் வலியுறுத்தல்!

அறிவியல் மையம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள அறிவியல் மையத்தினை சுகாதாரத்துடன் பராமரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வலியுறுத்தினார்.  

நெல்லையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல் மையம் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கப்பட்டது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அறிவியல் பொருள்களும், மாதிரிகளும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. டைனோசர் பார்க், 3-டி திரையரங்கு, அறிவியல் அறிஞர்களின் உருவச் சிலைகள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணி, தொலைநோக்கி, கண்ணாடி மாயாஜால அரங்கு, டி.வி.ஸ்டுடியோ, கோளரங்கம் எனத் தகவல்களின் சுரங்கமாக இந்த மையம் உள்ளது.

6 ஏக்கர் பரப்பளவில், 80 வகையான அரிய வகை மரங்கள், தாவரங்களுடன் பூங்காவும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பள்ளி கல்லூரிகளின் மாணவ மாணவிகள் அதிகமாக வருகின்றனர். அத்துடன். இந்த மையத்தில் கருத்தரங்கங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. மாணவர்களுக்காகப் போட்டிகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. 

அறிவியல் மையத்தில் கலெக்டர்

இந்த நிலையில், இந்த மையத்தில் இன்று ஆற்றல் சேமிப்பு குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விழிப்பு உணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த ஆட்சியர், சுற்றிப் பார்வையிட்டார்.

அறிவியல் மையத்தின் பல இடங்களில் சுகாதாரக் குறைபாடு இருப்பதைக் கண்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவற்றை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். உடைந்து கிடந்த குப்பைத் தொட்டிகள், நோய் பரப்பும் வகையில் தண்ணீர் தேங்கும் இடங்கள் போன்றவற்றையும் சரிப்படுத்த அவர் உத்தரவிட்டார். சுகாதாரத்தை மேம்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்த்த பொதுமக்கள், அவரின் செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement