வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (23/08/2017)

கடைசி தொடர்பு:13:38 (23/08/2017)

சென்னை தினமும்... அ.தி.மு.க-வுக்கான ஆலோசனையும்..! #Chennai378 #ADMKMerger

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா  Chennai378

‘சென்னை’ என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இன்று தனது 378-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தின் தலைநகராம் இந்தச் சென்னை மாநகரம், மெரினாவின் ஆழிப் பேரலையிலும்... சென்னைப் பெருவெள்ளச் சமயத்திலும் ஏற்பட்ட இடர்களுக்குத் தனது ஒற்றுமையை ஆயுதமாக்கிக் காட்டியது. தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு தெரியாமல்தான், சென்னையின் பிறந்த தினம் விடிந்திருக்கிறது. 

அப்போலோவில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, ஆளும் அ.தி.மு.க-வில் நினைவிலேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு அதிரடியாகப் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அமர்ந்து தியானம் செய்துவிட்டு வந்து ‘தர்மயுத்தம்’ தொடங்குகிறது என்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதையடுத்து, முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவும், அவரின் உறவினர் இளவரசியும் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அவரது தொகுதியான ஆர்.கே நகரில் கட்சியின் இரண்டு அணியினரும், வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டார்கள். இறுதியில் ஆர்.கே.நகரில் நிகழ்ந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்டது.

அ.தி.மு.க அணிகள்

இரண்டு பேருக்கு நடுவிலான மோதல் கால ஓட்டத்தில் ‘தினகரன் - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்’ என மும்முனை மோதலாக மாறியது. 'பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைவதற்கு ஏதுவாக, கட்சியிலிருந்து நான் விலகியிருக்கவும் தயார்' என்று அறிவித்த தினகரனை எடப்பாடி அணி ஒதுக்கி வைத்தது. இந்நிலையில், பன்னீர்செல்வம் அணிக்கும் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருந்த சூழலில், சசிகலா, தினகரன் தரப்பினர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி அறிவித்தார். பேச்சுவார்த்தையின் உச்சகட்டத்தில், பல்வேறு இழுபறிகளுக்குப் பின் இரு அணிகளும் இணைந்தன. அதை அடுத்து பன்னீர்செல்வம், எடப்பாடி அரசில் துணை முதல்வராகப் சி.ஆர்.சரஸ்வதி தினகரன் அணிபதவியேற்றார். அவரது அணியின் மாஃபா பாண்டியராஜனுக்குத் தொல்லியல் மற்றும் தமிழ்மொழி வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 'சசிகலா மற்றும் தினகரன் தரப்பினருக்கு எதிராக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என ஒன்றாக இணைந்த அணியின் நிர்வாகிகள் அறிவித்தனர். என்ன படித்து முடித்ததும் குழப்பத்தில் தலைசுற்றுவது போன்ற உணர்வா?. கவலை வேண்டாம்.. இங்கு பெரும்பாலான தமிழக மக்களின் நிலைமையும் அதுவே. 

இன்று சென்னை தினம் தொடர்பாகப் பேசிய சசிகலா-தினகரன் தரப்பு செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, “நான் பிறந்த ஊர் புதுக்கோட்டை என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இது அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் இடம். தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களின் வீடு இருக்கும் இடம். அவர்கள் இருவரின் நல்ல திட்டங்கள் பல சென்னையில்தான் தொடங்கப்பட்டன. அம்மா உணவகம் முதன்முதலில் தொடங்கப்பட்டது இங்கேதான். எங்கள் கட்சி வளர்ந்தது இந்த மண்ணில்தான். அதனால் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவளாக எனக்கும் இந்தச் சென்னைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. சென்னை வெள்ளத்தின் போது முகம் அறியாத பல நபர்கள் ஒற்றுமையாக இருந்து தண்ணீரில் தத்தளித்த நகரத்தை மீட்டுக் கொண்டுவந்தனர். சென்னை எனக்கு ஒற்றுமையை... ஒற்றுமையின் பலத்தைக் கற்றுக் கொடுத்தது. எங்கள் கட்சித் தரப்புக்கும் இந்தப் பாடம் நிச்சயம் பொருந்தும்” என்று கூறி முடித்தார்.

குரங்கிடம் தங்களது அப்பத்தை பங்கிடச் சொல்லிக் கொடுத்த மூன்று பூனைகளில் ஒன்று மட்டும் அப்பத்தைத் திரும்பப் பெறப் போராடிக் கொண்டிருக்கிறது.. வெற்றி சாத்தியமா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்