Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்செட் ஆன தினகரன்- ஆர்.கே.நகர் கூட்டம் ரத்து!

தினகரன்

 

அணிகள் இணைப்பு, பொதுச்செயலாளர் பதவிக்கு செக் என அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து நடைபெற்ற அதிரடிகளால் கடும் நெருக்கடியில் உள்ளார் தினகரன். 
மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்குக் கூடிய கூட்டம்தான் தினகரன் அணிக்கு உற்சாகத்தையும், எடப்பாடி அணிக்குப் பீதியையும் ஏற்படுத்தியது. அடுத்தடுத்த கூட்டங்களைத் தினகரன் தொடர்ந்து நடத்தினால் கட்சியின் கட்டுப்பாடு தினகரன் கைக்குப் போய்விடும் என்று அஞ்சிய எடப்பாடி அணி இணைப்பை எப்படியும் முடித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டது. அதைச் செய்தும் முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. 

அதே நேரம் மேலூர் கூட்டத்தின் எழுச்சியால் உற்சாகம் அடைந்த தினகரன் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறும் கூட்டத்தைச் சிறப்புடன் நடத்திட தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக ஆர்.கே.நகர் கூட்டத்தின் பொறுப்பு வெற்றிவேல் வசம் ஒப்படைக்கபட்டிருந்தது. கூட்டத்திற்கான அனுமதி, லைசன்ஸ் உள்ளிட்டவை பெறப்பட்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது. ஐம்பதாயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வேலைகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், திங்கள்கிழமை அன்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த நிகழ்வில் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு தினகரனுக்குக் கடும் வேதனையைக் கொடுத்துள்ளது. அரைமணிநேரம் தனது வீட்டின் அறையில் யாரிடமும் பேசாமல் அமர்ந்துள்ளார் தினகரன். திங்கள்கிழமை மாலை சென்னையில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்த தினகரன் “23-ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெறவுள்ள கூட்டத்தை ஒத்திவைத்துவிடலாம். எப்போது நடத்துவது என்று பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என்று சொல்லியுள்ளார். உடனே நிர்வாகிகள் “தேனியில் 29-ம் கூட்டத்தை நடத்தலாமா?” என்று கேட்டுள்ளார்கள். அந்தக் கூட்டத்தையும் ஒத்தி வைத்துவிடுங்கள். சூழ்நிலைமாறிய பிறகு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார். 

தினகரன் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதே அவரின் பொதுக்கூட்டங்கள்தான், அதுவும் ரத்து செய்யப்பட்டதால் சோர்வடைந்துவிட்டார்கள் அவருடைய ஆதரவாளர்கள். தினகரன் தரப்புக்க்கு மத்திய அரசில் இருந்தும் கடும் அழுத்தம்வருவதாகவும் கூறப்படுகிறது. “கூட்டம் நடத்தினால், தினகரன் செல்வாக்குக் கட்சியினரிடம் கணிசமாக உயர்ந்துவிடும் என்பதால், கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதில் மாநில அரசும், மத்திய அரசும் உறுதியாக உள்ளது. அவர்கள் திட்டபடிதான் எல்லாம் நடந்துவருகிறது. தினகரன் கூட்டத்தை ரத்து செய்ததன் பின்னணியில் ஏதோ ஒரு தரப்பின் அழுத்தம் இருந்துள்ளது” என்கிறார் தினகரனுக்கு நெருக்கமான ஒருவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement