Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு மாதங்களாகக் கருணாநிதி கனவில் வருகிறார்..! உருகிய வைகோ

 

கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் கருணாநிதி எனது கனவில் வருகிறார் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 


தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த வைகோ, உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, '53 ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாகக் கல்லூரியில் வைத்து கருணாநிதியைப் பார்த்தேன்.

என்னை அரசியலில் வளர்த்தவர் கருணாநிதி. 23 ஆண்டுகளாகக் கருணாநிதியின் நிழலாக இருந்தேன். அவர் மீது சிறு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொண்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் அவர் என்னுடைய கனவில் வருகிறார். நான் சென்று வருகிறேன் என்று கூறியபோது என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார்.  திராவிட இயக்கத்தின் மணியோசைக் குரலாக கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்கும். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள முரசொலி பவளவிழாவில் கலந்துகொள்வேன்' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement