Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி ஊழியர்கள் போராட்டம்..! 1,100 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் பாதிப்பு

திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் இன்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் அந்த மாவட்டத்தில் மட்டும் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிவர்த்தனை முடங்கியிருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியிருந்தனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, பெடரல் வங்கியின் கிளை முன்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 333 தேசியமய வங்கிக் கிளைகள் அமைந்திருக்கின்றன. இந்தக் கிளைகள் அனைத்திலும் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 2,500 அதிகாரிகளும் இன்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.  மிகப்பெரிய தொழில் நகரமான திருப்பூரின் இன்றைய வணிகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை என சகலவிதமான வங்கி நடவடிக்கைகளும் ஒட்டுமொத்தமாக முடங்கியது. இன்றைய ஒருநாளில் மட்டும் 1,100 கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் முடங்கிப்போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement