Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவில்பட்டியில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்க தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையிலும் மாணவ மாணவிகள் மத்தியில் தேசப் பக்தியை வளர்க்கும் வகையிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்கள் மலரஞ்சலி

கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் நாடு முழுவதும் காந்தியடிகளின் தலைமையில் ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து ’வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைத்து  நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளின் நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்குட்பட்ட கடலையூர் கிராமத்தில் கைத்தறி நெசவில் ஈடுபட்டு வந்த வெயிலுகந்த முதலியார் தலைமையில் இக்கிராமத்தைச் சேர்ந்த 34 பேர் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கப் போராட்டத்தை  நடத்தி ஆங்கிலேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அப்போது ஆங்கிலேய நிர்வாகத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். மீதமுள்ளவர்கள் மீதும் தடியடி நடத்தி சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இந்தப்போராட்டத்தை நினைவுகூரும் விதமாக 2008-ம் ஆண்டில் கடலையூர் கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. 

மாணவர்கள் தேசப்பற்று உறுதிமொழி ஏற்பு

பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் தேசப் பற்றை வளர்க்கும் விதமாக இத்தியாகிகள் நினைவுச் சின்னத்தில் பள்ளி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதோடு தேசப்பற்றை வளர்க்கும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. பின், மாணவ மாணவிகளின் வீரவணக்க  ஊர்வலம் நடைபெற்றது. இக்கிராமம் முழுவதும் மாணவ மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தை கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தொடங்கி வைத்தார். 

மாணவர்களின் வீரவணக்க பேரணி

இக்கிராமத்தில் 34 தியாகிகளை நினைவுகூரும் வகையில் மணிமண்டபம் அமைத்து, ஒவ்வோர் ஆண்டும் அரசு சார்பில் மரியாதை செலுத்திட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement