வெளியிடப்பட்ட நேரம்: 00:22 (23/08/2017)

கடைசி தொடர்பு:08:06 (23/08/2017)

கேரள மக்கள் கொண்டாடும் தமிழக அதிகாரி

புறநகரிலுள்ள பேருந்து பணிமனையை ஆய்வு செய்துவிட்டு திருவனந்தபுரத்துக்குக் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, அரசுப்பேருந்து பஞ்சராகி நிற்பதைப் பார்க்கிறார். பயணிகள் கீழே நின்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அந்த அதிகாரி, காரை விட்டு இறங்கி, பேருந்தின் டயரை மாற்ற பணியாளர்களை அனுப்புங்கள் என்று அருகிலுள்ள பணிமனைக்கு போனில் கூறிவிட்டு, அவர்கள் வரும்வரை ஏன் நிற்கணும், என்று, டூல்ஸ்களை எடுத்துக்கொண்டு டயரை கழற்ற தொடங்கியுள்ளார்.  பதறிப்போன அவருடைய கார் டிரைவரும், பேருந்து டிரைவரும் அவருக்கு ஒத்தாசை செய்துள்ளனர். கழற்றி முடித்ததும், பணிமனையிலிருந்து வந்தவர்கள் வேறு டயரை மாற்றி பேருந்தை ஓடவைத்துள்ளனர்.

mgrajamanickam

அதற்குப்பின்புதான் டயரை கழற்ற வேலை பார்த்தவர், கேரள அரசுப் போக்குவரத்துத் துறையின் எம்.டி.யான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம் என்பது தெரிகிறது. மக்கள் அவருக்கு நன்றி கூறியுள்ளனர். அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அடுத்த பணிக்குக் கிளம்பிவிட்டார்.
இது சாதாரண வேலைதானே என்று நினைக்கலாம், அழுக்குப்படாமல் அலுவலகத்துக்கு வந்துசெல்கிற அதிகாரிகளுக்கு மத்தியில் இவரைப் போன்றவர்களும் இருக்கிறார்கள். மதுரை திருவாதவூரைச் சேர்ந்த இவர், கேரளப் போக்குவரத்துத் துறையில் பல சாதனைகளைச் செய்துவருகிறார்.  எர்ணாகுளம் ஆட்சியராக சிறப்பாகப் பணியாற்றி பாராட்டு பெற்றவர். அங்கிருந்தபடியே பிறந்த கிராமத்துக்குப் பல நன்மைகளைச் செய்துவருகிறார். கேரள மக்கள் யாரையும் உடனே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மதுரைக்காரரான ராஜமாணிக்கத்தைக் கொண்டாடுகிறார்கள் என்றால் சாதாரண விஷயமல்ல. நமக்கும் பெருமைதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க