எப்போது முடியும் உசிலம்பட்டி கால்வாய் திட்டம்? ஆட்சியர் ஆய்வு

சிலம்பட்டி அருகே, 20 வருடங்களாகக் கட்டப்பட்டுவரும் 58-ம் கால்வாய்த் திட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. உசிலம்பட்டி எம்.எல்.ஏ-வாக வல்லரசு இருந்தபோது, 1996ல் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதோ முடியும், அதோ முடியும் என்று கிராம மக்கள் சோர்ந்துபோனதுதான் மிச்சம். வைகை நதியின் உபரி வெள்ள நீர் மூலம் 58 கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கத் திட்டமிட்டு, இந்தப் பால வேலை தொடங்கப்பட்டது. வல்லரசுக்குப்பின் உசிலம்பட்டி எம்.எல்.ஏ-வாக வந்த எவரும் இந்தக் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக, 58 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டார்கள்.  

உசிலம்பட்டி கால்வாய்

 தாமதத்துக்கு, ஒப்பந்ததாரர் சரியில்லை என்ற ஒரே காரணத்தையே அரசு கூறிக்கொண்டிருந்தாலும், தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், தாமதப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், மதுரை கலெக்டர் வீரராகவராவ் இன்று 58-ம் கால்வாய்த் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார். வேலைகள் துரிதமாக நடக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!