Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணப்பாறையில், துப்பாக்கி வெடித்து 10-ம் வகுப்பு மாணவன் பலி!

ணப்பாறை அருகே, தவறுதலாக துப்பாக்கியைப் பயன்படுத்திய 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பலியான சம்பவம், அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மணப்பாறையை அடுத்துள்ள பாலக்குறிச்சி கணேஷ் நகரைச் சேர்ந்தவர், சவரிமுத்து. இவர், ஒய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகன் ஹெவின் மார்க், 10-ம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று, சவரிமுத்து வீட்டில் துப்பாக்கி சத்தம் பலமாகக் கேட்டது. சத்தம் கேட்டு பதறியடித்தபடி சவரிமுத்து மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது, மாணவன் ஹெவின் மார்க் ரத்த வெள்ளத்தில்  தலை சிதறிக் கிடந்தான். அருகில் துப்பாக்கி கிடந்தது.

ராணுவ வீரரான சவரிமுத்துவின் வீட்டிலிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஹெவின் மார்க் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், இதுகுறித்து விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஹெவின் மார்க் தனது அப்பா சவரிமுத்துவின் துப்பாக்கியைத் தவறுதலாகப் பயன்படுத்திய போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம், மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏற்கெனவே, கடந்த சில வாரங்களுக்கு முன், மணப்பாறை பகுதியில் பழைய இரும்புக்கடையில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ராக்கெட் வெடித்த பிரச்னைகுறித்த பரபரப்பு தற்போது ஓய்வடைந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி வெடித்து, அவரது மகன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement