வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (23/08/2017)

கடைசி தொடர்பு:08:57 (23/08/2017)

நள்ளிரவில் திடீர் பள்ளம் – மணப்பாறை அருகே கிராம மக்கள் பீதி

ணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில், குடியிருப்பை ஒட்டிய பகுதியில் திடீரெனப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், நள்ளிரவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மணப்பாறை

திருச்சி மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள முருகன் மலைக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சாலையில் சிறு பள்ளம் உண்டானது. அதை அந்தப் பகுதி மக்கள் கல்லைப்போட்டு மூடினர்.

நேற்று  இரவு 9 மணியளவில், சின்னதாகக் குழி இருந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. ஒரு ஆள் உயரத்துக்கும் மேலாக உள்ள அந்தப் பள்ளத்தைப் பார்த்துப் பதறிய பொதுமக்கள், ஊரில் உள்ளவர்களுக்குத் தகவல் சொல்ல, மக்கள் அந்தக் குழியின் அருகே அதிர்ச்சியுடன் கூடி, வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

கிராமத்துப் பகுதியில் திடீரென ஏற்பட்டுள்ள ஆள் உயரப் பள்ளத்தால், மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தப் பள்ளம் ஏன் உண்டாகிறது என அரசு புவியியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க