Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்! - ஆந்திர அரசு புதிய திட்டம்

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு


ஆந்திர மாநில அரசு, அங்கு வசிக்கும் அனைவருக்கும் சம உரிமை, மேம்பட்ட வாழ்வாதாரம் ஆகியவற்றை அளிக்கும் விதமாக திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ’தற்போது அமராவதியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் அளிப்பது, ஆதரவில்லா குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளோம். நல்லாட்சியை வழங்கும் நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சி குறித்த மக்களின் கருத்துகளைக் கேட்பதற்காக 1100 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் இல்லா ஆட்சியை மக்களுக்கு அளிப்பதற்காகவே, இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளேன். அதேபோல, மக்களுக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் அவர்களை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகள் இருப்பது குறித்து மக்கள் புகார் தெரிவித்தால், அந்தக் கடைகள் உடனடியாக அகற்றப்படும்’ என்று அவர் பேசினார். அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட சலுகைகளை திருநங்கை சமுதாயத்துக்கு அளித்த நாட்டின் முதல் மாநிலம், ஒடிசா என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement