வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (23/08/2017)

கடைசி தொடர்பு:11:24 (24/08/2017)

புதுச்சேரி சொகுசு விடுதி முன்பாக தினகரன் உருவ பொம்மை எரிப்பு!

புதுச்சேரியில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள தனியார் சொகுசுவிடுதி முன்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.  


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். முதலமைச்சரை மாற்றக் கோரியே ஆதரவை வாபஸ் பெற்றதாக தங்க தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் கூறினர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர்கள், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஓம் சக்தி சேகர் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த விடுதியின் முன்பு கூடினர். அப்போது டி.டி.வி.தினகரனின் உருவ பொம்மையை எரித்த அவர்கள், ’சொகுசுவிடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற வேண்டும்’ என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க