Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்சியிலிருந்து அமைச்சரை நீக்கிய டி.டி.வி.தினகரன்! தொடரும் அதிரடி

எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபின், புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியானது. புதிய அமைச்சர்களுக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

ttv dinakaran
 

இதைத் தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்டனர். ’பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக’ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநருக்கு கடிதம் அளித்தனர்.  தினகரன், நேற்றிலிருந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். அ.தி.மு.க. அம்மா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வைத்திலிங்கத்தை நீக்கிவிட்டதாக நேற்று அறிவித்தவர், இன்று மேலும் சிலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் விருதுநகர் எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பொறுப்பிலிருந்து அழகர்சாமியும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜன் செல்லப்பாவும் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனும் நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக எம்.எல்.ஏ. ரங்கசாமியும் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக மாரியப்பன் கென்னடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement