வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (23/08/2017)

கடைசி தொடர்பு:12:50 (23/08/2017)

’நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு அநீதி!’ - நீதிபதி வேதனை!

’நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது’ என உயர் நீதிமன்ற நீதிபதி குற்றம் சுமத்தினார்.

உயர் நீதிமன்றம்


நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வழக்கமாக, ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு, நீட் தேர்வு விவகாரத்தால் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க இருக்கிறது. 

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ‘நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு, மாணவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டது. மாநில பாடப்பிரிவு, சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றி தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இன்று மதியம் 2.15 மணிக்குள் வெளியிடப்பட்ட தர வரிசையில், யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என பதிலளிக்க வேண்டும். மருத்துவச் சேர்க்கையில் உரிய நேரத்தில் தமிழக அரசு முடிவெடுக்கத் தவறிவிட்டது’ என கோபமாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.