வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (23/08/2017)

கடைசி தொடர்பு:13:27 (23/08/2017)

தி.மு.க-வை காப்பியடித்த காங்கிரஸ்!

தமிழக காங்கிரஸ் கட்சி இன்று ஆளுநருக்கு அனுப்பிய கடிதம், நேற்று தி.மு.க அனுப்பிய கடிதத்தை அப்படியே காப்பியடித்துள்ளது.

அ.தி.மு.க-வின் தினகரன் ஆதரவாளர்கள், நேற்று ஆளுநரை நேரில் சந்தித்து 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவதாக' அதிரடியாக அறிவித்தனர். 19 எம்.எல்.ஏ-க்கள் முதல்வருக்குக் கொடுத்துவரும் ஆதரவை விளக்கிக்கொண்டால், சட்டசபையில் பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள்' என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், 'தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை' என்று தெரிவித்து, தமிழகக் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி இன்று ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். ஆளுநருக்கு நேற்று மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை அப்படியே காங்கிரஸ் காப்பியடித்துள்ளது.