வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (23/08/2017)

கடைசி தொடர்பு:13:55 (23/08/2017)

ஒரு மொபைலின் விலை 1.5 லட்சம்... என்ன செய்திருக்கிறது லம்போகினி?

காஸ்ட்லி கார் உற்பத்தி நிறுவனமான லம்போகினி (Lamborghini), புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆடம்பரப் பிரியர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஆல்ஃபா ஒன் (Alpha One) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

லம்போகினி - Lamborghini - Alpha One Smartphone

அதிநவீன ஆடம்பரத் தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக லம்போகினி நிறுவனம் விளம்பரப்படுத்தினாலும், மீடியம் பட்ஜெட் மொபைல்களிலேயே இதன் பெரும்பாலான வசதிகள் கிடைக்கின்றன. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர், ஃபிங்கர்பிரின்ட் சென்சார், ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 20 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 3250 mAh பேட்டரி மற்றும் 4G டூயல் சிம் என இதன் ஸ்பெக்ஸ் மீடியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் போலதான் இருக்கிறது.

லிக்விட் மெட்டல் ஃப்ரேம், இத்தாலியன் ஹேண்ட்மேட் லெதர் கேஸ் என இதன் வடிவமைப்பு அசத்தலாக இருந்தாலும், இதன் விலை 2,450 டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் 1,57,000 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க