Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’அம்மா இருந்ததால அமைதியா இருந்தோம்’ - தினகரன் மீது பாயும் ஆறுக்குட்டி

வைத்திலிங்கம், ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயக்குமார் ஆகிய மூவரும் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டார்கள் என அவர்களைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் தினகரன். தினகரனின் இந்த அறிவிப்புக்கு எதிராக கொதித்தெழுகிறார், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வான ஆறுகுட்டி.

 

arukutty

 

இதுகுறித்து நமக்குப் பேட்டியளித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, “நாங்கள் 70 ஆண்டுகளாக அ.தி.மு.க-வுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். வைத்திலிங்கத்தையும் ஆர்.பி.உதயகுமாரையும், ராஜன் செல்லப்பாவையும்  நீக்க  தினகரன் யார்? நீக்குங்கள்... எத்தனை பேரை  நீக்க முடியும்? கட்சியில் இருக்கும் ஒன்றரைக் கோடி தொண்டர்களையும் நீக்கிற முடியுமா? உண்மையிலேயே தெம்பு இருக்குமானால் பொதுக்குழுவைக் கூட்டுங்கள், நீங்களா நாங்களான்னு போட்டுப் பாத்துப்போம். அம்மா இருந்தாங்கன்னு இவ்வளவு நாள் எதுவும் பேசாம இருந்தோம். இனியும் அப்படியே இருப்போம்னு நெனைச்சுக்காதீங்க. திவாகரனெல்லாம் யாரு? கட்சியைக் காப்பாத்தினோம், அம்மாவைக் காப்பாத்தினோம்  ஆளாளுக்கு ஒரு கதை விட்டுக்கிட்டு இருக்கீங்க. அம்மா  உங்க தயவால வாழ்ந்தாங்களா?  இல்ல அம்மா தயவுல உங்க குடும்பம் வாழ்ந்தீங்களாங்கிறதை நாங்க சொல்லி நாட்டு மக்களுக்குத் தெரியவேண்டியதில்லை. நீங்க கட்சிக்குத் துரோகம் செய்றீங்களா? இல்லை இவ்வளவு காலமா கொடி பிடிச்சு... கூட்டம் திரட்டுன நாங்க துரோகம் செய்யுறோமா? உங்க பதவியே செல்லாதுங்கும்போது எங்களை நீக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. தினகரன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுறாரே. இதை ஊழல் ஆட்சினு சொல்றாரே... அப்போ சசிகலா எதுக்காக சிறையில இருக்காங்க.? இந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டு எங்களப் பத்தி பேசச்சொல்லுங்க. இனிமேல் என்ன நாடகம் நடத்தினாலும் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அ.தி.மு.க-வுக்குள் உங்களால் நுழைய முடியாது” என்று தினகரனுக்கு எதிராகக் கொதிக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement