Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி ரிசார்ட்டில் என்ன செய்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள் ?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஓபிஎஸ்-சசிகலா என இரு அணியாகப் பிரிந்தது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராகப் பதவியேற்றதும் அவருக்கென ஓர் அணி உருவானது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் ஒன்றிணைந்தன.

புதுச்சேரி ரிசார்ட்

இது டிடிவி தினகரன் அணிக்கு (சசிகலா) அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக மனு அளித்தனர். அதனால் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவானது. அதனால் எதிரணியினர் வளைத்துவிடாமல் இருக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் ’விண்ட் ஃப்ளவர்’ என்ற தனியார் பீச் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று மாலை புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் இருக்கும் ரிசார்ட்டுக்கு வந்தடைந்தனர். நேற்றிரவு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச் செல்வன் உட்பட மூன்று எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டிற்கு பின்புறமிருக்கும் வழியாக நடந்தே பாரடைஸ் பீச்சுக்கு சென்று திரும்பினர். அதேபோல் இன்று காலையில் ரிசார்ட்டின் பின்புறம் உள்ள பீச்சிலும், ரிசார்ட்டின் உள்ளேயும் கைலியுடன் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

பின்னர் நீச்சல் குளத்தையொட்டி இருக்கும் ரெஸ்டாரன்டில் காலை உணவைச் சாப்பிட்டனர். தொடர்ந்து ரெஸ்டாரன்ட், கார்டன் என தனித்தனியே எம்.எல்.ஏ-க்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு பெண் எம்.எல்.ஏ-க்களான உமா மகேஸ்வரி மற்றும் ஜெயந்தி பத்மநாமன் இருவரும் காலை உணவுக்காக மட்டுமே அறையை விட்டு வெளியே வந்தனர். டிடிவி தினகரன் இன்று ரிசார்ட்டிற்கு வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் பெங்களூரு செல்லவிருப்பதால் இன்று புதுச்சேரி வருவது சந்தேகம்தான் என்கின்றனர் அவர்களது ஆதரவாளர்கள். இன்றுவரை மட்டுமே அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை அல்லது இரவே அவர்கள் ரிசார்ட்டில் இருந்து கிளம்புவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement