Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிறந்தநாளில் தொண்டர்களைச் சந்திக்கிறார் விஜயகாந்த்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

vijayakanth


விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க கடைப்பிடித்து வருகிறது. அந்தத் தினத்தில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். விஜயகாந்த் முன்புபோல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறவுள்ள பிறந்த நாள் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தே.மு.தி.க அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிலையற்ற அரசியல் சூழல் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சூழல் மட்டுமில்லை விஜயகாந்த் எதைப் பற்றிப் பேசினாலும் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement