Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனித வடிவாகத் தும்பிக்கை இன்றி பிள்ளையார்

உலகெங்கும் கணபதியின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சாணத்திலும் சந்தனத்திலும் பிடித்து வைத்தால்கூட அது கணபதி என்றே வணங்கக்கூடிய பெருமை கொண்டவர் முழுமுதற் கடவுளான கணநாதர். மிகமிக வித்தியாசமாக இவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற ஊரில் உள்ள ஆலயத்தில் காணப்படுகிறார். ஆம், இங்கு மனித வடிவாக தும்பிக்கை இன்றி இருக்கிறார். இங்கு மருதம் பிள்ளையார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். எண்ணியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

தும்பிக்கை

மகாகவி முத்தப்பர் என்ற கவிஞர் இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார். இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம் இங்கே. இந்த ஆலயத்தில் சைவமுனி, முருகர், வனதுர்க்கை சந்நிதிகளும் இருக்கின்றன. வித்தியாசமான, ஆனால் அருள்நிறைந்த இந்த கணபதியைக் கண்டு தரிசிப்பது அபூர்வமான அனுபவம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement