Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனபாலை ஏன் முன்னிறுத்துகிறார் திவாகரன்? - கொங்கு மண்டலத்துக்கு அடுத்த 'செக்'

திவாகரன்

ன்னீர்செல்வமும், பழனிசாமியும் கட்சியையும், ஆட்சியையும் பங்குபோட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் சசிகலா குடும்பத்தினர். எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட ஆதரவை வாபஸ் வாங்குவதாக கவர்னரிடம் கடிதம், வைத்திலிங்கம் நீக்கம், கூவத்தூர் பாணியில் ரிசார்ட்ஸ் அரசியல் என்று பரபரப்பாக இயங்கி வருகிறது தினகரன் அண்ட் கோ. அதில் முக்கியமானது, சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற மூவ். திவாகரன் முதல் புகழேந்தி வரை தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று முழங்கி வருகின்றனர். இதற்கு பின்னால், ஒரு பெரிய அரசியல் ராஜதந்திரம் இருக்கிறது என்கிறார்கள்.

2001 தேர்தல் சமயம் அது. சங்ககிரி தொகுதி வேட்பாளராக தனபால் அறிவிக்கப்பட்டார். அப்போது விசாரணை ஒன்றுக்காக கார்டனுக்கு அழைக்கப்பட்டார் தனபால். "நீங்க ஏன் கட்சிக்காரங்களுக்கு சாப்பாடு கூட போடறதில்லையாம். கட்சிக்காரங்களோட நெருங்கியும் பழகுவதில்லையாம்" என்று ஜெயலலிதா அவரிடம் கடிந்துள்ளார். இதற்கு தனபால், "அம்மா என்னை மன்னிச்சுருங்க. நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். நம்ம கட்சிக்காரங்க எங்க வீட்டு சாப்பாடை எல்லாம் சாப்பிட மாட்டாங்க. இதுவரை ரெண்டு தடவை நான் சாப்பாடு போட்டதை அவங்க புறக்கணிச்சுட்டாங்க... தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என் வீட்ல எல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்கம்மா" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்

அந்த நேரத்தில், சரி நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க என்று சொன்ன ஜெயலலிதா, பின் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தனபாலை உணவுத்துறை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் பதவி கொடுத்து, அனைவரும் வணங்கும் இடத்தில் அமர வைத்து அவரை மேலும் கௌரவப்படுத்தினார் ஜெயலலிதா. அப்போதில் இருந்தே ஜெயலலிதாவின் குட்புக்கில் தனபாலுக்கு தனி இடம் உண்டு.

சபாநாயகர் தனபால்

ஆனால், மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்ற நினைத்த தனபாலுக்கு கடந்த சில அமைச்சரவை மாற்றங்களில் கிடைத்தது ஏமாற்றம்தான். தனபாலுக்கு, கிட்டத்தட்ட 34 தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏற்கெனவே, தற்போது முதல்வராக உள்ள எடப்பாடியிடம், தனபாலை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர

ஆறு முறை எம்.எல்.ஏ, அமைச்சரவையில் இடம், துணை சபாநாயகர், சபாநாயகர் என்று அ.தி.மு.க ஆட்சிகளில் முக்கிய பங்கு வகித்த தனபால், தற்போது நடந்து வரும் ஆட்சி நீடிக்கவும் பல்வேறு வகைகளில் தனது உதவிகளை அளித்து வருகிறார் என்பது அ.தி.மு.க-வில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். நம்பிக்கை வாக்கெடுப்பு முதல் பல்வேறு உதாரணங்கள் அதற்கு உள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த உடன் தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தனபால் எதிர்பார்த்தாராம். ஆனால், அதிலும் தனபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், வேதனையடைந்த தனபால், வெளியூருக்குச் சென்றுவிட்டாராம். பின்னர் அவரது குடும்பத்தினர், சசி குடும்பத்தினரிடம், தனபாலின் வருத்தம் குறித்து சொல்லியுள்ளனர்.

இதைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட திவாகரன், "அது என்ன அமைச்சர் பதவி... அவரை சி.எம் ஆக்கறோம்... கவலைப்படாதீங்க" என்று ஆறுதல் சொன்னார்களாம். மேலும், தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்தை தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் முன்வைக்கிறார்களாம். கவுண்டர் சமுதாயம், ரெட்டியார் சமுதாயம், முக்குலத்தோர் சமுதாயம் என்று  பலரும் முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டனர். ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வர் பதவியில் அமரவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்களாம்.

தனபாலை முதல்வராக்க வேண்டும் என்றால் அதற்கு பன்னீரோ, எடப்பாடியோ வெளிப்படையாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் முதல்வராவதை பி.ஜே.பி-யாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதுகின்றனர் தினகரன் அணியினர். இவற்றை எல்லாம் யோசித்துதான் தனபாலை முதல்வராக முன்னிறுத்தும், ஒரு ராஜதந்திர நகர்வை கையில் எடுத்துள்ளது தினகரன் அண்ட் கோ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement