Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியல் ராஜதந்திரி, பண்ருட்டி ராமச்சந்திரன் மெளனம் காப்பது ஏன்?

கலைஞர், எம்.ஜி.ஆர். அரசியல் காலகட்டத்தில் ராஜதந்திரி என்று வர்ணிக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்படிப்பட்ட ஒருவர், அ.தி.மு.க.வில் இருந்தும் அக்கட்சியில் இவ்வளவு களேபரங்கள் நடந்துகொண்டிருக்கும்போது மெளனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


"1977ல் இருந்து 1987 வரை அரசியல் காலகட்டத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அடுத்தப்படியாக பேசப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டமன்ற தேர்தல் என்றாலே பண்ருட்டி தொகுதியில் ஜெயித்தவர் யார் என்று கலைஞரே கேட்கும் அளவிற்கு நடுங்கவிட்டவர்.

"குதிரை என்று இழுத்துவந்தேன் கழுதை என்று தெரிந்ததுமே சசிகலா நடராஜனிடமே விட்டுவிட்டேன்" என்று ஜெயலலிதாவையே பொதுமேடையில் விமர்சித்தவர். இவர் டெல்லி செல்கிறார் என்றால் தமிழக அரசியல் களமே அப்போது கதிகலங்கும். இப்படிப்பட்ட ஒருவர் அ.தி.மு.க.வில் இருந்தும் அக்கட்சியில் இவ்வளவு களேபரங்கள் நடந்துகொண்டிருக்கும்போது இப்படி மெளனமாக இருந்தால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதுகுறித்து அவருடைய ஆதரவாளர்களிடம் பேசினோம், "எம்.ஜி.ஆர். அவருக்கு ஒரு கடிதம் எழுதி, சமயம் வரும்போது அதை பயன்படுத்திக்கொள் "என்று கொடுத்திருக்கிறார். இதுவரை அந்த ரகசியத்தை அவர் காத்துவருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தாய் தொகுதியான பண்ருட்டியில்தான் அவர் போட்டியிட ஆசைப்பட்டார். ஆனால் சிலர், அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வைத்து அவர்களே அவரை தோற்கடித்துவிட்டார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில்தான் இப்போது அமைதியாக இருக்கிறார். இப்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வரும். அப்போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு, எம்.ஜி.ஆர். அவருக்குக் கொடுத்த கடிதத்தைப் பயன்படுத்திக்கொள்வார்" என்கிறார்கள்.
                       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement