Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

75 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினமான 75 கிலோ கடல் அட்டையினைச் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை உயிரினங்கள் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் கடல் அட்டையும் ஒன்று. இந்தக் கடல் அட்டையினை மீனவர்கள் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்தக் கடல் அட்டைக்கு அதிக மதிப்பு உள்ளதால் மீனவர்கள் கள்ளத்தனமாக கடல் அட்டையினைப் பிடித்து வந்து அவற்றை விற்பனை செய்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. குறிப்பாக மண்டபம், வேதாளை, மரைக்காயர் பட்டினம் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கடல் அட்டைகள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன.

கடலில் விடப்பட்ட கடல் அட்டை

இந்நிலையில் மண்டபம் முனைக்காடு வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் சுங்கத் துறையினர் சோதனைக்குச் சென்றனர். அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சுமார் 75 கிலோ எடை கொண்ட உயிருடன் கூடிய கடல் அட்டையிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்  தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய சுங்கத் துறையினர் வேதாளைப் பகுதியைச் சேர்ந்த ரமேஸ் என்பவரைக் கைது செய்தனர். 
பின்னர் பிடிபட்ட கடல் அட்டைகளைச் சுங்கத் துறையினர் மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் உயிருடன் இருந்த கடல் அட்டைகளை மீண்டும் பாம்பன் கடல் பகுதியில் விட்டனர். கைது செய்யப்பட்ட ரமேஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement