Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை..! விண்ணப்பிக்க இரண்டு நாள்களே உள்ளன

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. தமிழகத்தில் பள்ளிக் கல்லூரிகளில் பயிலும் தகுதியான ஆண், பெண் விளையாட்டு வீரர்கள், மாணவர் அல்லாத விளையாட்டு வீரர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் அல்லாதோருக்குப் பத்தாயிரம் ரூபாயும், மாணவர்களுக்குப் பதிமூன்றாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள்


 உதவித்தொகை பெறத் தகுதியாக, கடந்த வருடத்திலிருந்து தற்போதுவரை மாவட்ட மண்டல, மாநில அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்க வேண்டும். இவர்களுடன், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக் கழகங்கள், தேசிய விளையாட்டு குழுமங்கள், பல்கலைக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதைப்பூர்த்தி செய்து வெற்றி பெற்ற சான்றிதழ் நகல்களை இணைத்து வருகின்ற 25-ம் தேதிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டும். http://www.sdat.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement