வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (23/08/2017)

கடைசி தொடர்பு:21:50 (23/08/2017)

மானாமதுரையில் சூடு பிடிக்கும் களிமண் விநாயகர் சிலை விற்பனை..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பரபரப்பாகக் காணப்படுகிறார்கள். நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் சதூர்த்தியை முன்னிட்டு ஆறு அடி முதல் ஒன்பது அடி வரைக்கும் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கிச் செல்கிறார்கள். ஆகையால் பிள்ளையார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 


கெமிக்கல் கலந்த கலர் பொடிகள் மற்றும் ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு வட மாநிலத்தவர்கள் உருவாக்கம் பிள்ளையார் சிலைகள் சாலை ஓரங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால், அந்தச் சிலைகள் சுற்றுக் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.  

 

ஆனால், மண்ணால் செய்யும்  பிள்ளையாரை கண்மாயில் கொண்டு போய் கரைக்கும் போது தண்ணீருக்கும் மாசு ஏற்படாமல் இருக்கும். சுற்றுபுறச் சூழலும் பாதுகாக்கப்படும். ஆகையால், இந்த வருடம்  மண் பிள்ளையாருக்கு மவுசு அதிகம். மானாமதுரையிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட 6 அடி 9 அடி விநாயகர் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு விநாயகரும் பன்னிரண்டாயிரம் முதல் பதினெட்டாயிரம் வரைக்கும் விற்பனையாகி கொண்டிருக்கின்றது. மானாமதுரையில் மாற்றுத்திறனாளியான பாண்டியராஜன் செய்யும் விநாயகருக்குத்தான் மவுசு அதிகம்..

நீங்க எப்படி பீல் பண்றீங்க