Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு!

யோகி ஆதித்யநாத்

த்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரியில், இரு வாரங்களுக்கு முன்பு ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அம்மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு நோடல் அலுவலரான மருத்துவர் காஃபீல் கான், தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்தும், வெளியில் இருந்தும் 10,000 ரூபாய் கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார். இந்த மருத்துவரின் செயலால், பல குழந்தைகளின் உயிர்க் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், மருத்துவமனை முதல்வரை மிஸ்ராவையும், மருத்துவர் காஃபீல் கானையும் அம்மாநில அரசு நீக்கியிருக்கிறது. 

ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதே, பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம். ஆக்ஸிஜன் சப்ளைக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தாத உத்தரப்பிரதேச அரசே, குழந்தைகளின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவந்தன. இந்நிலையில் குழந்தைகள் உயிரிழப்பு பற்றி விசாரணை செய்த முதன்மைச் செயலாளர் ராஜீவ்குமார் தலைமையிலான உயர்மட்டக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கோரக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்ளிட்ட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement