Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உப்பூரில் வெயிலுக்கு உகந்த விநாயகர் திருக்கல்யாண விழா..!

ராமநாதபுரம் அருகே உள்ள உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகர்- சித்தி புத்தி தேவியர் திருக்கல்யாண திருவிழா விமர்சையாக நடைபெற்றது. 

உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்


ராமநாதபுரத்திலிருந்து 25 கி. மீ தொலைவில் உள்ளது உப்பூர். இங்கு வெயிலுக்கு உகந்த விநாயகர் ஆலயம் உள்ளது. சூரியனின் வெளிச்ச ஒளி எப்போதும் இக்கோயிலில் உள்ள விநாயகர் சிலை மீது படுவதால் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு. சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லும் வழியில் உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகர் ஆலயத்தில் யாகம் வளர்த்த ராமர், விநாயகருக்குச் சித்தி புத்தி தேவியரைத் திருமணம் நடத்தி வைத்த நிகழ்வின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இங்கு 10 நாள்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் நாள்தோறும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


 8-ம் நாள் திருவிழாவான இன்று மாலை வெயிலுக்கு உகந்த விநாயகருக்கும் சித்தி-புத்தி தேவியருக்கும் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடந்தது. இவ்விழாவில் உப்பூர், திருவாடானை, தொண்டி, ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வணங்கிச் சென்றனர். திருவிழாவின் இறுதி நாளான ஆக.25-ம் தேதி சதூர்த்தி அன்று விநாயகர் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி, பக்தர்களுக்குத் தீர்த்தவாரி வழங்குகிறார். இதை முன்னிட்டு பக்தர்கள் காவடி மற்றும்  தீ மிதித்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement