Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வேலைப்பளு':  சென்னையில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி!

கடுமையான வேலைப்பளுவின் காரணமாக விரக்தியடைந்த சென்னை அயனாவரம் பணிமனையைச் சேர்ந்த பஸ் டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆறுமுகம் (வயது 56), கொரட்டூர் - பிராட்வே வழித்தடத்தில் செல்லும் 7பி அரசுப் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு உரிய ஓய்வின்றி அதிக நேரம் பணிபுரியமாறு மேல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மரியாதை இல்லாமல், அவதூறான வார்த்தையால் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த பஸ் டிரைவர் ஆறுமுகம், இரவு 9 மணியளவில் அயனாவரம் பேருந்து பணிமனை விளக்குக் கம்பத்தின் மீது ஏறி நின்று குதிக்கப் போவதாக  தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்து வந்த போலீஸார் அவரை சமாதனம் செய்து, கீழே இறங்க வைத்தனர்.  சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் நீடித்ததால் நள்ளிரவு வரை அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement