Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீவைகுண்டம் அருகில் நிலத்தடி நீர் ஏற்றிச்சென்ற 18 லாரிகள் சிறைபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவை மீறி மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு தனியார் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஸ்ரீவைகுண்டம் அருகில் பொன்னன்குறிச்சி பகுதியில் நிலத்தடி நீரை ஏற்றி வந்த 18 லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர். 

தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தவிர, நிலத்தடி நீர் மட்டமும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.  இந்நிலையில், தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் தனியார் அனல்மின் நிலையங்கள், ஆறுமுகநேரியில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல் ஆலை ஆகியவற்றுக்கு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் முறைகேடாக உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டையில் இதே போல தண்ணீர் ஏற்றி  வந்த 10 லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்துப் போராட்டம் நடத்தினர். மாவட்டத்தில் தொடரும் நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி இரு தினங்களுக்கு முன்பு நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் போலீஸாரின் உத்தரவை மீறி ஆட்சியர் அறையை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இன்று மாலை பொன்னன்குறிச்சி பகுதியில் 18 லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்

சிறைபிடிக்கப்பட்ட தண்ணீர் லாரிகள்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கூறுகையில், “ நிலத்தடி நீரை வணிகம் மற்றும் வியாபாரத்துக்காக எடுக்கக்கூடாது என மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரவிக்குமாரும், தற்போதைய ஆட்சியர் வெங்கடேஷும் தடை விதித்துள்ளார்கள். நிலத்தடி நீரை விவசாயம் தவிர பிற பயன்பாட்டுக்காக பயன்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் நிலத்தடி நீர் கொள்ளை தொடர்ந்து  நடந்து வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையோ மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தடி நீர் எடுப்பது திருட்டு. அத்திருட்டை யார் வேண்டுமானாலும் தடுக்கலாம். அந்த நோக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியினர் ஒன்றுதிரண்டு 18 தண்ணீர் லாரிகளை சிறைப்பிடித்துள்ளோம். குடிநீருக்கே அல்லல்பட்டு வரும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை தாரை வார்ப்பது அவசியம்தானா?’’ என கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement