Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனா துறைமுகத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்ததால் மந்திரி பதவி நீக்கம்!

லங்கையில், சீனா துறைமுகம் அமைப்பதற்கு, இலங்கையின் நீதித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபர் மைத்ரிபால சிறிசேனா மந்திரி பதவியிலிருந்து அவரை அதிரடியாக நீக்கியுள்ளார்.

ஹம்பன்தோட்டா துறைமுகம்

இலங்கையின் தெற்கில் உள்ள ஹம்பன்தோட்டா என்ற கடற்பகுதியில் சீனா தனது துறைமுகத்தை அமைக்க, இருநாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது இந்த துறைமுகத்தை உடனடியாக அமைப்பதற்கு சீனா தீவிரம் காட்டி வருவதுடன் அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், சீனா துறைமுகம் அமைப்பதற்கு இலங்கையின் நீதித்துறை மந்திரியான விஜயதாச ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, நீதித்துறை மந்திரியான விஜயதாச ராஜபக்சேவை உடனடியாக பதவிலியிருந்து நீக்கியுள்ளார். இதுபற்றி இலங்கை மந்திரிசபை "அனைவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை விஜயதாச ராஜபக்சே மட்டும் எதிர்த்து வருகிறார். இதனால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கியுள்ளோம்" என பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளது.

சீனா தீவிரம் காட்டிவரும் ஹம்பன்தோட்டா துறைமுகம் கட்டப்படுமேயானால் அது இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement