Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை  தமிழகத்தில் ஒரு கோடியைத்தாண்டியுள்ளது.  

வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் என்று மாற்றப்பட உள்ள நிலையில், ஜுன் 30-ம் தேதி வரை வேலைக்காக பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 21,09,926 பேரும், 18 முதல் 23 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் 21,66,031 பேரும், 24 வயது முதல்  35 வயது வரையுள்ளவர்கள் 28,91,275 பேரும், 35 வயது முதல் 56 வயதுவரை காத்துக்கொண்டிருப்பவர்கள் 1,04,531 பேரும், 57 வயதுக்கு மேலாகியும் நம்பிக்கையுடன்  காத்திருப்பவர்கள் 5,709 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்துள்ளவர்களில் எஸ்.எஸ்.எல்.சி,  இளநிலை, முதுநிலைபட்டதாரிகள், ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் என்று பலரும் கலந்துள்ளனர். எவ்வளவுதான் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வந்தாலும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. பதிவு செய்தவர்களே இவ்வளவு பேரேன்றால், இதுவரை பதிவுசெய்யாதவர்கள், குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லாதவர்கள் எவ்வளவு பேர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement