Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

36 கிலோ கொழுக்கட்டை படையலிட்டு சிறப்பு பூஜை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் 36 கிலோ எடைகொண்ட ஒரே கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.

நாகர்கோவில் கோட்டார் சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமோற்சவ விழா கடந்த 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.108 சங்காபிஷேகம்,108 கலசாபிஷேகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

எட்டாம் நாள் விழாவை ஒட்டியும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சித்தி புத்தி சமேத சக்தி விநாயகருக்கு மாலைகள் மாற்றப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்படும் திருக்கல்யாண நிகழ்வு  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து விநாயகருக்கு 36 கிலோ எடைகொண்ட ஒரே முக்குறுணி கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது அதைக் கோவிலைச் சுற்றி வலம் வந்து விநாயகருக்கு படைத்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொழுக்கட்டை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (24-ம் தேதி) சுவாமி பல்லக்கில் வீதி உலாவும் இசக்கி அம்மனுக்கு அன்னப் படையலும் நடைபெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement