Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி முதல்வருக்கு தர்ம அடி

சேலம்-கோவை நெடுஞ்சாலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வளையக்காரனூரில் உள்ளது எஸ்.எஸ்.எம் தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் குமார் சார்லிபால். இவர் கடந்த ஒரு வருடமாக இக்கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார். இவர் தன் கல்லூரியில் படிக்கும் பல மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

 

பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு அடி உதை


இதனால் கடும் கோபம் அடைந்த கல்லூரி மாணவ மாணவிகள் முதல்வரை சரமாரியாகத் தாக்கி தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள். சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து முதல்வரை விலக்கிவிட, அடி தாங்க முடியாமல் முதல்வர் தட்டுத் தடுமாறி தப்பித்து ஓடிப் போய் காரில் ஏறி இருக்கிறார். காரை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், வாகனத்தின் கண்ணாடிகளை சுக்கு நூறாக உடைத்தனர். பிறகு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்காக வந்த மாணவ மாணவிகளை காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார்கள்.

இதுபற்றி அக்கல்லூரியில் உள்ள சில மாணவிகளிடம் கேட்டதற்கு, ''குமார் சார்லிபால் இக்கல்லூரியின் முதல்வராக வந்ததில் இருந்தே பெண்களிடம் தவறான கண்ணோட்டத்துடன் பழகி வந்தார். கல்லூரிக்கு கால தாமதமாக வரும் மாணவிகளை உடனே அவர் அறைக்கு வரச் சொல்லி இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளில் பேசுவார். இரவு நேரங்களில் மாணவிகளுக்கு போன் செய்துவிட்டு, தவறுதலாக செய்துவிட்டேன் என்பார். மகளிர் விடுதிக்கு ஆய்வு என்ற பெயரில் உள்ளே புகுந்து மணிக்கணக்காக மாணவிகளிடம் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார். மாணவிகளை தன் காரில் அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு கொடுப்பார்.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் .கல்லூரி

கடந்த 3 நாள்களுக்கு முன்பு கூட எங்கள் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அதை நவீன் என்ற ஆசிரியரிடம் சொல்லி இருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவி. இதையடுத்து நவீன் சார், முதல்வரை சந்தித்து, 'ஏன் இப்படி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். இதற்கு அவர், 'என் பெர்ஸனல் விஷயத்தில் தலையிடுகிறாயா? என்று, நவீனை கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்திருக்கிறார். இதற்கு பிறகு தான் நவீன் சார் சஸ்பெண்ட் செய்தது, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்தது போன்றவற்றை மாணவர்களிடம் முறையிட்டோம். இதையடுத்துதான் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது'' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement