Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று நகராட்சிக்கு ஒரே ஆணையர்- கலக்கும் சரவணக்குமார்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆணையர்கள் நாகர்கோவில் நகராட்சியில் மாறிவிட்டனர். அதன்பின் நீண்ட நாள்களாக ஆணையர் இல்லாமல் நாகர்கோவில் நகராட்சி இயங்கி வந்தது. கடந்த சிலமாதங்களுக்கு முன் உடுமலைபேட்டை நகராட்சி ஆணையர் சரவணக்குமார் நாகர்கோவில் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் பல அதிரடிகளை நாகர்கோவிலில் நடத்தினார். பிளாஸ்டிக் கட்டுப்பாடு, சந்தைகள் ஏலம் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பலர் அதிர்ச்சி அடைந்தனர். மக்கள், ஆணையரைப் பாராட்டினார்கள். உடுமலைப்பேட்டை நகரத்தை சிறப்பாக நிர்வகித்ததால் அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் குமரிமாவட்டத்தின் குளச்சல் நகராட்சிக்கும்  சரவணக்குமார் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூன்று நகராட்சிக்கு ஒரே ஆணையராக சரவணக்குமார் செயல்படுகிறார்.

நாகர்கோவில் நகராட்சியை பொறுத்தவரை, மாநகராட்சியாக விரைவில் மாறும் சூழல் உள்ளது. மக்களும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆணையரிடம் புகார் மற்றும் கோரிக்கைகளை கொடுக்க தினமும் வருகின்றனர். நகராட்சியில் பல்வேறு முக்கிய முடிவுகளை ஆணையர்தான் எடுக்க முடியும். சரவணக்குமாருக்கு குளச்சல் நகராட்சி பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதால் அவரால் நாகர்கோவில் நகராட்சிப் பொறுப்பை சரிவர கவனிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, நாகர்கோவில் ஆணையர் பொறுப்பை மட்டும் சரவணக்குமார் கவனிக்கும் வகையில் அவரது பணிச்சுமைகளை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேர்மையான அதிகாரிகளுக்கு பணிச் சுமையை அதிகரிப்பதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement