Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரி எஸ்.பி.யுடன் தளவாய்சுந்தரம் திடீர் சந்திப்பு

டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  எஸ்.பி.தர்மராஜனுடன் மூன்று மணி நேரம் சந்தித்துப் பேசியதால் குமரிமாவட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தற்போது நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜனிடம் மூன்று மணி நேரம் பேசினார். இதனால் செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அ.தி.மு.க-வினர் மத்தியில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மணி நேரமாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் சந்திப்பை முடித்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர் சந்திப்பு குறித்து கேட்டபோது மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க நட்புரீதியாக சந்தித்ததாகவும் இதற்கு அரசியல் காரணங்கள் இல்லை. மகளின் திருமணம் முடிந்த பின் அரசியல் பேசுவதாகவும் தெரிவித்துவிட்டு அவரது காரில் புறப்பட்டுச் சென்றார்.

தற்போது இணைந்துள்ள இரு அ.தி.மு.க. அணிகளைச் சேர்ந்த சிலர் மேல் வழக்குகள் பாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இனி குமரியில் டி.டி.வி. ஆதரவாளர்கள் மட்டும் செயல்படும் விதமாக மற்றவர்களுக்கு காவல்துறை மூலம் நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement